ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பிடன் முன்னிலை

0 1922

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் முன்னிலை பெற்றுள்ள ஜோ பிடன், ட்ரம்பை வீழ்த்த ஒன்றிணைந்து செயல்படுவோம் என சக போட்டியாளர் பெர்ணி சாண்டர்சுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களமிறங்கும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து களம் காணும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கு பலமுனை போட்டி நிலவியது.

இதையடுத்து ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தேர்வு செய்யவே அங்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் பெருவாரியான இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ள முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், இறுதியாக மிச்சிகன் மாநில தேர்தல் முடிவிலும் வெற்றி வாகை சூடியுள்ளார்.

இதையடுத்து பிலதெல்பியாவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய அவர், பொதுவான நமது இலக்கை அடைய இணைந்து செயல்படுவோம் என சக போட்டியாளர் பெர்னி சாண்டர்சுக்கு அழைப்பு விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments