மீண்டும் மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை சந்திக்கும் ரஜினி.. கட்சி துவங்கும் ஏற்பாடு தீவிரம்..?

0 4124

மாவட்டச் செயலாளர்களை நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சந்தித்துப் பேச உள்ள நிலையில், அவரது ரசிகர் மன்ற மாநாடு குறித்த அறிவிப்பு நாளை  வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை கடந்த வாரம் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனையின் போது ஒரு விஷயத்தின் தனக்கு ஏமாற்றம் இருந்ததாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் நாளை காலை 8 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் ராகவேந்திரா மண்டபத்துக்கு வர வேண்டும் என ரஜினி தரப்பில் இருந்து அழைப்பு விடுத்துள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை நடைபெற உள்ள ஆலோசனையின் போது ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாநாடு நடத்துவது குறித்து விவாதிக்கப்பம் என்று கூறப்படுகிறது. மாநாட்டுக்கான இடம், தேதி ஆகியவை நாளையே இறுதி செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்களுடனான ஆலோசனையை தொடர்ந்து ரஜினி செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும். அப்போது மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே ரஜினி நாளை மாவட்டச் செயலாளர்களை சந்திக்க உள்ள நிலையில், அவருக்கு அரசியல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வரும், தமிழருவி மணியன் ரஜினியை இன்று சந்தித்து பேசினார்.

பிறகு ரஜினியுடனான சந்திப்பு குறித்து பேசிய தமிழருவி மணியன், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த எதிர்ப்பார்ப்புகளுக்கும், கேள்விகளுக்கும் நாளை ரஜினிகாந்த் நிச்சயம் பதில் கூறுவார் என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் தனது மன்ற நிர்வாகிகளை கோடம்பாக்கத்திலுள்ள அவருக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நாளை சந்தித்து பேச உள்ளதாக முதலில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் சென்னை ஆர்.கே. சாலையிலுள்ள கிளாரியன் பிரசிடென்ட் நட்சத்திர ஹோட்டலில் (Clarion Hotel President) தமது மன்ற நிர்வாகிகளை ரஜினி சந்திக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும், இதன்பிறகு காலை 10 மணிக்கு செய்தியாளர்களுக்கு ரஜினிகாந்த் பேட்டியளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஆலோசனை கூட்டத்துக்கு வரும் தென்மாவட்ட நிர்வாகிகள் இன்றைக்குள் சென்னைக்கு கட்டாயம் வந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments