தாலிபன் கைதிகளை விடுவிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ஆப்கான் அதிபர்

0 1760

சிறையில் உள்ள தாலிபன் கைதிகளை விடுதலை செய்வதற்கான உத்தரவில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி கையெழுத்திட்டார். சிறையில் இருந்து தாலிபன் கைதிகள் விடுவிக்கப்படும் போது அவர்களை அழைத்துச் செல்வதற்கு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

பதிலுக்கு சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரம் ராணுவ வீரர்களை விடுவிக்க தாலிபன் ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்காவுக்கும் தாலிபன்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த ஒப்பந்தம் முக்கியமான அம்சமாக இருந்தது.

ஆப்கன் சிறைகளில் உள்ள 5000 தாலிபான்களில், முதல்கட்டமாக 1500 பேர் விடுவிக்கப்பட உள்ளனர். அரசுஅமைத்துள்ள குழு தாலிபான்களுடன் பேச்சு நடத்தியபின் மீதமுள்ளவர்களை விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments