எதிர்க்கட்சியினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு

0 2147

டெல்லியில் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து தலைநகரில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.

எதிர்க்கட்சியினர் டெல்லியின் சட்டம்ஒழுங்கு பற்றிய கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் அது குறித்த விவாதத்திற்கு மக்களவை சபாநாயகர் அனுமதியளித்துள்ளார். டெல்லி கலவரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

இப்பிரச்சினை காரணமாக மக்களவையை செயல்பட விடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹோலிக்குப் பிறகு விவாதத்தை எடுத்துக்கொள்வதாக மத்திய அரசு உறுதியளித்திருந்தது.

இன்று இப்பிரச்சினை விவாதிக்கப்படும் போது காங்கிரஸ் கட்சியினர் மத்தியப் பிரதேச அரசியல் விவகாரத்தை எழுப்பி மீண்டும் அமளியில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments