கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி - திரையரங்குகள் மூடல்
கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜம்முவில் வருகிற 31ந் தேதி வரை சினிமா திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஜம்மு-காஷ்மீர் முதன்மை செயலாளர் ரோகித் கன்சால், பந்திப்போரா, பாரமுல்லா, ஸ்ரீநகர், மற்றும் புத்கம் மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளும் வருகிற 31ந் தேதி வரை மூட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜம்முவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒருவர் ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
Comments