Yes வங்கி வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மின்னணு பரிமாற்ற சேவை

0 1263

யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மின்னணு பண பரிமாற்ற சேவை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வங்கியின் ஐ.எம்.பி.எஸ்., என்.இ.எப்.டி. போன்ற மின்னணு பண பரிமாற்ற சேவைகள் மீண்டும் இயங்குவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், யெஸ் வங்கியின் கிரெடிட் கார்டு நிலுவைத்தொகை, கடன் தவணை ஆகியவற்றை வேறு வங்கிகளின் கணக்கில் இருந்து மின்னணு பரிமாற்ற முறையில் செலுத்துவது மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

தனது ஏ.டி.எம்.கள் முழுமையாக செயல்படுவதாகவும், இதர வங்கிகளின் ஏ.டி.எம்.களிலும் நிர்ணயிக்கப்பட்ட தொகைக்குள் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments