இத்தாலியில் காத்திருக்கும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர பிரதமருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

0 732

இத்தாலி விமானநிலையத்தில் காத்திருக்கும் இந்தியர்களை பத்திரமாக அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இத்தாலியில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான சான்றிதழ் இல்லாத காரணத்தால் விமான நிலையத்திலேயே காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதுகுறித்து தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அந்த இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த கடித த்தில் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments