தன்னை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

0 1429

தமிழக அமைச்சரவை தீர்மானத்திற்கு பிறகும் விடுவிக்காமல் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள தன்னை விடுவிக்கக் கோரி நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது தமிழக ஆளுநர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தான் சட்டவிரோத காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை விடுவிக்கவும் கோரி நளினி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

கடந்த மாதம் 20ம் தேதியுடன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு, நளினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments