கொரானாவை விட கொடியது டிக்டாக்..! ஓவரா பண்றீங்கடா
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வரும் நிலையில் சமூக வலைதள வைரஸான டிக்டாக்கில் கொரோனா குறித்து கேலியும் கிண்டலும் பெருகி வருகின்றது
கொரோனா வந்தாலும் வந்தது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கருதி செல்போன்களில் ரிங்டோனாக, இருமலுடன் அட்வைஸ் பண்ணத் தொடங்கி இருக்கின்றது மத்திய சுகாதாரத்துறை..! இருமினால் போதும் அங்கேயே அடித்து புதைத்துவிடுவோம் என்கின்றனர் இந்த டிக்டாக் அடிமைகள் இருமலுடன் வீட்டுக்குள் வந்தால் மிதித்து விரட்டி அடிக்கப்படுவீர்கள் என்று சொல்கிறார் இந்த டிக்டாக் இல்லத்தரசி..!
இருமிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தால் கணவனாக இருந்தாலும் பெட்டி படுக்கையுடன் வெளியே தள்ளி கதவை பூட்டி மருந்து தெளியுங்கள் என்று சேட்டை செய்கின்றார் இந்த டிக்டாக் திலகவதி..!கொரோனாவிடம் சிக்கவைக்க தனது கணவரை அன்போடு சீனாவுக்கு அனுப்பி வைக்க எத்தனிக்கும் மனைவியிடம் கொரோனாவை விட கொடியது காதல் வைரஸ் என்கிறார் இந்த மாப்பிள்ளை
இன்னும் ஒரு படிமேலே போய் போர போக்குல 2 கிலோ கொரோனா வாங்கிட்டு வாங்கன்னு டிக்டாக்கில் ஒரு குரூப் சிரிப்பு மூட்டிகிட்டிருக்கு.
டிக்டாக்கில் தான் கொரோனா குறித்த விழிப்புணர்வு விபரீதமாக போய்வரும் நிலையில், மும்பையில் சீன தூதரக அதிகாரியுடன் புத்தத் துறவிகளுடன் இணைந்து "கோ கொரோனா" என மத்திய சமூக நீதித்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே முழக்கமிட்டதையும் விமர்சித்து வருகின்றனர்.
இப்படி கொரோனாவிற்கு எதிராக கண்மூடித்தனமாக விமர்சித்துவரும் டிக்டாக் உலகில், கொரோனா வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை மிகச்சரியாக காட்சிப்படுத்தி டிக்டாக்கின் மானத்தை காப்பாற்றி இருக்கின்றது இந்த வட நாட்டு தம்பதி..!
மேலும் கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க வெளியிடங்களுக்கு சென்று வந்தால் கைகளை நன்றாக கழுவுங்கள் என்று கற்று தருகின்றது இந்த வட மாநில இளைஞரின் டிக்டாக்
அதே நேரத்தில் தமிழகத்தில் குடும்ப வாழ்வில் விபரீதங்களை விதைப்பதிலும், உறவுகளுக்குள் விவகாரங்களை வளர்ப்பதிலும் கொரானாவை விட கொடிய வைரஸாக டிக்டாக் பரவிகிடக்கின்றது என்பதே கசப்பான உண்மை..!
Comments