கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு வரும் கோழிகள், முட்டைகள் திருப்பி அனுப்பிவைப்பு
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவிவருவதால், அங்கிருந்து தமிழகத்துக்கு கொண்டுவரப்படும் கோழிகள் மற்றும் முட்டைகள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருவதாக, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளிலிருந்து, கடந்த ஒரு மாதத்தில் வாங்கிவரப்பட்ட முட்டைகள், கோழிகள் மற்றும் வாத்துக் குஞ்சுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் வண்ணம் 1061 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால், கோயம்புத்தூரில், 24 மணிநேரமும் செயல்படும் நோய் கட்டுப்பாட்டு அறைக்கு 0422-2397614 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும், கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Comments