வாஷிங்டன் போயிங் ஆலை ஊழியருக்கு கொரானா தொற்று

0 1055

வாஷிங்டன் எவரெட் டில் உள்ள (Everett ) தனது உற்பத்தி ஆலை பணியாளர் ஒருவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது. கொரானா தொற்று பாதித்த ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மற்ற ஊழியர்கள் பாதுகாப்பு எச்சரிக்கைகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறும் போயிங் அறிவுறுத்தியுள்ளது.

உற்பத்தி ஆலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், புகட் சவுண்ட்(Puget Sound) தொழிற்சாலை பணியாளர்கள் விரும்பினால் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்றும் போயிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் சியாட்டில் உள்ள ஃபேஸ்புக் மற்றும் அமேசான் நிறுவனங்களில் தலா ஒரு பணியாளருக்கு கொரானா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments