முகமூடிகளை மறுவிற்பனை செய்தால் 7 லட்ச ரூபாய் அபராதம்
கொரானா எதிரொலியாக, மருத்துவ பொருட்களுக்கு அதிகரித்துள்ள தேவையை சாதகமாக்கிக் கொண்டு, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட முகமூடிகளை, புதிதுபோன்று, மறுவிற்பனை செய்தால், ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ஜப்பான் அரசு கடுமையாக எச்சரித்திருக்கிறது.
இதுமட்டுமின்றி, 7 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரானா அச்சத்தால், உலகளவில், நவீன ரக முகமூடிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒருசில நாடுகளில் அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஜப்பானில், பயன்படுத்திய முகமூடிகளை, மறுவிற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
Comments