கொரானா தொற்று பயம் - 40 சதவீதம் வரை குறைந்த விமான கட்டணங்கள்

0 3912

கொரானா தொற்று பயம் காரணமாக பயணம் செய்வோரின் எண்ணிக்கை சரசரவென்று சரிந்துள்ளதை அடுத்து உள்நாட்டு, சர்வதேச விமான கட்டணங்கள் கடந்த நான்கைந்து நாட்களில் 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளன.

பெங்களூருவில் இருந்து இதர மெட்ரோ நகரங்களுக்கான விமானக் கட்டணம் இரண்டாம் வகுப்பு ஏ.சி. ரயில் கட்டணத்தை விட குறைந்துள்ளது. இந்த நிலைமை நாடு முழுதும் நிலவுகிறது . 3 ஆயிரம் ரூபாய் வரை உள்ள சென்னை-பெங்களூரு விமான கட்டணம் திங்களன்று ஆயிரத்து 91 ரூபாயாக குறைந்தது.

சென்னை-பெங்களூரு சதாப்தி ரயிலில் எக்சிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் ஆயிரத்து 455 ஆக இருக்கும் நிலையில் அதை விட விமான கட்டணம் குறைவாக உள்ளது. சர்வதேச சேவைகளைப் பொறுத்த வரை கடந்த திங்களன்று பெங்களூர்-துபாய் கட்டணம் 7 ஆயிரம் ரூபாயாக வீழ்ச்சி அடைந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments