இந்தியாவில் வரத் தயாராகி வருகிறது PAL-V Flying car....

0 1903

நெதர்லாந்தை சேர்ந்த பறக்கும் கார் உற்பத்தி நிறுவனமான PAL V இந்தியாவில் தனது உற்பத்தி தொழில்சாலையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 2021ம் ஆண்டிலிருந்து தனது உற்பத்தியை குஜராத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம் குஜராத் மாநிலத்தின் முதன்மைச் செயலாளரான எம்.கே தாஸ் மற்றும், PAL-V நிறுவனத்தின் சர்வதேச வணிக மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவரான கார்லோ மாஸ்போம்ல் ஆகியோரிடையே கையெழுத்தாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


தற்போது பிளையிங் கார் 110 கார்களுக்கான ஏற்றுமதிக்கான ஆடர்களை ஏற்கெனவே பெற்றுள்ளதாகவும், 2 என்ஜின்களைக் கொண்ட இந்த பறக்கும் கார்கள், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் சாலையிலும், 180 கி.மீ வேகத்தில் வானில் பறக்கும் திறனில் வடிவமைக்கபடுகிறது. சாலைகளில் சென்று கொண்டிருக்கும்போது 3 நிமிடங்களில் பறக்க ஆயத்தமாக வகையில் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments