Yes Bank விவகாரம் - பிரியங்கா காந்தியிடம் விசாரணை..?

0 6858

வங்கி முறைகேடில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ் வங்கி முன்னாள் தலைவர் ராணா கபூருக்கு ஓவியம் விற்ற விவகாரத்தில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

வங்கிப் பணத்தை ஆடம்பர வாழ்க்கைக்கு வாரி இறைத்த ராணா கபூர், மறைந்த பிரதமர் ராஜீவ் காந்திக்கு சொந்தமான ஓவியம் ஒன்றை இரண்டு கோடி ரூபாய் விலை கொடுத்து பிரியங்கா காந்தியிடம் இருந்து வாங்கி உள்ளார்.

ராணா கபூரிடம் இருந்து பெற்ற இரண்டு கோடி ரூபாயை, சிம்லாவில் காட்டேஜ் கட்ட பிரியங்கா காந்தி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

ராணா கபூரின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பணமோசடி வழக்கில் இதுவும் சேர்க்கப்பட உள்ளது. ஓவியம் விற்பனை தொடர்பாக பிரியங்கா மற்றும் ராணா கபூர் தரப்பில் எழுதப்பட்ட கடிதங்கள் மற்றும் காசோலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments