திருமணம் செய்து வைத்த திராவிடர் விடுதலை கழக நிர்வாகி கடத்தல்?

0 1405

மேட்டூர் அருகே இருவேறு சமூகங்களைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு திருமணம் செய்துவைத்ததாகக் கூறப்படும் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவரை பெண்ணின் உறவினர்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு ஏற்படவி, கொளத்தூரில் திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து உக்கம்பருத்திக்காட்டில் தங்கவைத்திருந்தார்.

இதனை அறிந்து சென்ற பெண்ணின் உறவினர்கள் பெண்ணை மீட்டு அவருக்கு திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனை கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.தகவல் அறிந்து வந்த போலீசார் ஈஸ்வரனை மீட்டு பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments