Yes வங்கியில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத முக்கிய புள்ளிகள்

0 6721

Yes வங்கியில் கடன் பெற்ற 2 பெரும் முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களால் அந்த வங்கிக்கு 21,000 கோடி வாராக்கடன்களாகியுள்ளது.

Yes வங்கியில் இதுவரை 2.9 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு  வாடிக்கையாளர்கள்  வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர். வங்கி இதுவரை 2.25 லட்சம் கோடி அளவிற்கு வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கடன்களை வாரி வழங்கியுள்ளது. இந்தியாவின் 5வது வங்கியாக இருந்த Yes வங்கி தற்போது வராக்கடன்களால் திவாலாகியுள்ளது.HDFC, KOTAK MAHINDRA போன்ற வங்கிகளை போன்று வளர வேண்டும் என்ற ஆசையில், கடன்களை வாரி வழங்கியுள்ளார் Yes வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூர்.

இதன் விளைவாக, 8,373 கோடி வாராக்கடன்களாக ஆகியது. இதில், 44 பெரிய கம்பெனிகள், 10 கார்ப்ரேட் குழுமங்களும் அவர்கள் பெற்ற கடன்களை திருப்பி செலுத்தவில்லை. அதில், குறிப்பாக முதலாவதாக, அனில் அம்பானி 12,800 கோடி ரூபாயையும், எஸ்எல் குழுமத்தின் சுபாஷ் சந்திரா 8,400 கோடியையும் திருப்ப செலுத்தவில்லை. இந்த இருவரிடம் மட்டும் 21,200 கோடி வராக்கடன் ஆகியுள்ளது.

மற்ற நிறுவனங்களை எடுத்து கொண்டால், திவான் ஹவுசிங் பினான்ஸ் 4,735 கோடியும், ஐ.எல்.எப்.எஸ் 2,500 கோடியும், ஜெட் ஏர்வேஸ் 1,100 கோடியையும் பெற்றுள்ளது. Cox & kings 1,000 கோடியும், ஓம்கார் ரியாலிட்டி 2,710 கோடியும், பி எம் கெய்தான், பாரத் இன்ப்ரா 1,250 கோடியும், ரேடியஸ் டெவலப்பர் 1,200 கோடியும் பெற்று திருப்ப செலுத்தவில்லை. இவை அனைத்தும் சேர்த்து 34,000 கோடி வராக்கடன்களாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments