மகாநதி ஷோபனா பாடிய 'கந்த சஷ்டி கவசம்' பாடல்களை youtube -ல் வெளியிட இடைக்கால தடை
சிம்பொனி நிறுவனம், மகாநதி 'ஷோபனா பாடிய 'கந்த சஷ்டி கவசம்' பாடல்களை யூடியூபில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மகாநதி படம் மூலம் பிரபலமான நடிகையும், கர்நாடக இசை கலைஞருமான ஷோபனா, கடந்த 1995ம் ஆண்டு சிம்பொனி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து "கந்த சஷ்டி கவசம்" மற்றும் " டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார்" ஆகிய 2 ஆல்பங்களை பாடியுள்ளார். இந்த 2 ஆல்பங்களும் தற்போது 'சிம்பொனி' மற்றும் 'பக்தி எப்.எம்' என்ற பெயரில் உள்ள யூ டியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிரான வழக்கில் முகநூல் பக்கத்திலிருந்த ஷோபனாவின் புகைப்படங்களை எடுத்து பாடல்களுக்கு பயன்படுத்தியது சட்டவிரோதம் என அவர் தரப்பில் வாதிடப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, அந்த 2 ஆல்பங்களையும் யூடியூபில் வெளியிட சிம்பொனி நிறுவனத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
Comments