Holi கொண்டாட இது தான் காரணமா ?

0 2531

ஹோலி பண்டிகையானது உலகளவில் இந்துக்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் மக்கள் வண்ண பொடிகளை துவியும், தண்ணீரில் வண்ண பொடிகளை கலந்து ஒருவர் மீது ஒருவர் ஊற்றியும் சந்தோஷமாக கொண்டாடுகின்றனர்.

பனிகாலம் முடிவடைந்து இளவேனிற்கால தொடக்கத்தில் மாசி மாத கடைசி முழு நிலவு பௌர்ணமியில் ஹோலியானது கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் ஐந்து நாட்கள் ஹோலி தினம் கடைபிடிக்கபட்டு வருகிறது. குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், புது மனிதர்கள் என வேறுபாடு பாராது அனைவரும் கலர் பொடிகளை துவி இனிப்புகள் வழங்கி கொண்டாடுகின்றனர். இன்று சிறப்பாக கொண்டாடும் இந்நன்னாளிற்கு பல வரலாற்று சம்பவங்கள் காரணமாக இருந்து வருகின்றன.

கலர்ஸ்

பிரம்மாவிடம் சாகா வரம் பெற்ற இரண்யகசிபு அசுரர்களின் அரசனாவான். இவனின் மகன் பிரகல்லாதன் நாராயணனின் தீவிர பக்தன், எப்போதும் திருமாலின் நாமத்தை உச்சரித்து வந்துள்ளான். இதற்காக இரணியன் தன் மகனை பல முறை அழிக்க முயற்சித்த போதும் திருமாலின் ஆசியுடன் பிரகல்லாதன் உயிர் பிழைத்து வந்தான்.

பின் தனது மகனை அழிக்க தங்கை ஹோல்காவிடம் ஆணையிட்டான் இரணியன் . ஹோல்கா தீயினால் எரியாதபடி அணிந்திருந்த போர்வையை தனது சக்தியாக பெற்றிருந்தாள். அண்ணன் இரணியன் ஆணைகிணங்க பிரகல்லாதனை தன் மடியில் உட்கார வைத்து தீ வைத்து எரித்து கொண்டாள், தீயில் எறிந்த படியே விஷ்ணுவின் நாமத்தை உச்சரித்து வணங்கிணான் பிரகல்லாதன்.

கலர்ஸ்

இந்நிலையில் பக்தனின் நாமம் கேட்டு அவதரித்த விஷ்ணு நாராயணன் ஹோல்கா மீது இருந்த போர்வையை எடுத்து பக்தன் பிரகல்லாதனை தீயினால் அணையாதபடி காப்பாற்றினான். போர்வையை இழந்த ஹோல்கா தீயில் ஏரிந்து தகனமானாள், பிரகல்லாதன் உயிர் பிழைத்து ஹோல்கா தீயில் தகனமான அந்த வரலாற்று நிகழ்வினை இன்று ஹோலியாக கொண்டாடுகின்றனர்.  இன்றும் ஹோலி தினத்தன்று தீமைகள் அழிய வேண்டும் என்பதன் நோக்கில் ஹோல்காவின் உருவ பொம்மையை தீயில் வைத்து எரித்து இவ்வண்ண பண்டிகையை நிறைவேற்றுவார்கள்.

கலர்ஸ்

ஹோலி பண்டிகை கொண்டாட பல வரலாற்று நிகழ்வுகள் இருந்து வந்த நிலையில் கருநிற உருவம் கொண்ட கண்ணன் தன் தாய் மீது வண்ணம் பூசியதாகவும் பின்னர் தாய் இராதையின் மீது வண்ணம் பூசியதாலும் கிருஷ்ணன் கோபியருடன் கொஞ்சி மகிழ்ந்துள்ள இன்றைய நாளினை ஹோலியாக கொண்டாடப்படுகிறது என்கின்றனர்.

image

ஈசனை மணப்பதற்கு பார்வதி தேவி காமதேவன் என்கிற மன்மதனின் உதவியை தேடி சென்றிருந்தாள். பார்வதிக்கு உதவிடும் நிலையில் மன்மதன் ஆழ்ந்த தவத்தில் இருந்த சிவனின் மீது மலர்கணையை எய்தி தவத்தை கலைத்தான். இதனால் ஆத்திரமடைந்த ஈசன் தன் நெற்றி கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினான்.

பின்னர் மன்மதனின் மனைவி ரதிதேவி வேண்டுகோளுக்கிணங்க எவர் கண்ணுக்கும் தெரியாது ரதிதேவிக்கு மட்டும் மன்மதனின் உருவம் தெரியும்படி உருவக செய்தான். உடல் வழியே காமத்தை வெளிபடுத்த முடியாத நிலையில் ரதிதேவியுடன் உணர்வு உருவமாக வாழ்ந்து வந்த காமதேவன் உயிர்பித்த இன்றைய நாளினை ஹோலியாக கொண்டாடப்பட்டு வருகின்றனர் என்று புராண கதைகளை தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments