ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தை இழந்த முகேஷ் அம்பானி

0 4877

கொரானா தாக்கத்தால் பங்கு விலைகள் குறைந்ததை அடுத்து ஆசியாவின் முதல் பணக்காரர் என்ற இடத்தில் இருந்து, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி 2 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

முகேஷ் அம்பானிக்கு சுமார் 43 ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது சொத்து மதிப்பு சுமார் 3 லட்சத்து 14 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

3,33,750 கோடி ரூபாய் மதிப்புடன் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை சீனாவின் அலிபாபா குழுமத்தின் நிறுவனர் ஜேக் மா ((Jack Ma)) பெற்றுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு வரை ஆசியாவின் முதல் பணக்காரராக இருந்த இவர் அந்த இடத்தை முகேஷ் அம்பானியிடம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments