அம்பானியின் 56000 கோடி சொத்து ஒரே நாளில் காலி!

0 7788

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரரான அம்பானியின், பார்ட்னர் நிறுவனமான சவுதி அராம்கோ நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 320 பில்லியன் டாலர் அளவிற்கு நஷ்டம் அடைந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை சவுதி அராம்கோ பல பில்லியன் டாலர்களுக்கு விரைவில் வாங்கவுள்ளது. இந்நிலையில், 2 நாட்களில் சவுதி அராம்கோ நிறுவனம் வரலாறு காணாத அளவில் 320 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. நேற்று கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்து அதன் விலையை 20% வரையில் குறைத்து வெளியிட முடிவு செய்தது சவுதி அரேபியா. இதனால் அந்த நாட்டு பங்குச்சந்தைகள் நேற்று ஒரே நாளில் 9.4 % வீழ்ச்சியை சந்தித்தது. கடந்த 2 நாட்களில் சவுதி அராம்கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 320 பில்லியன் டாலர் குறைந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. இதன் மூலமாக, 2 டிரில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்ட சவுதி அராம்கோ தற்போது வெறும் 1.4 டிரில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்டுள்ளது.

அராம்கோ நிறுவனத்திற்கு, அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் நிறுவனத்தின் பெட்ரோலிய கெமிக்கல் வர்த்தக பிரிவின் 20% பங்குகளை விற்பனை செய்ய ஒப்புகொண்டபோது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலைகள், கடந்த 20 டிசம்பர் 2019-ல் உச்ச விலையாக, 1,617 ரூபாயைத் தொட்டது. ஆனால் தற்போது, ரிலையன்ஸின் பங்கு விலை 1,104-ல் ரூபாயாக குறைந்து நேற்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும், 2.88 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருந்து வருகிறது. இதனை சமாளிக்க முகேஷ் அம்பானி, இதற்கு ஈடாகப் புதிய வர்த்தகங்களில், அதாவது, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரீடைல் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இதனிடையே ரிலையன்ஸ் இண்டஸ் ரீஸ் நேற்றைய வர்த்தகம் சரிந்ததில், ஒட்டுமொத்த முதலீட்டாளர்களையும் கதி கலங்க வைத்து உள்ளது.

இதனால், அம்பானியின் சொத்து மதிப்பு 7.8 பில்லியன் டாலர் அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையின்படி, 50 பில்லியன் டாலாராக இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 42.2 பில்லியன் டாலாராக இருந்துள்ளது. இந்த நிலையில், தற்போது, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் 56,000 கோடி ரூபாய் இதன்மூலம் காணாமல் போயுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments