தீயாய் பரவும் கொரோனா.. மாஸ்க்கை தொடர்ந்து Sanitizer-களுக்கு தட்டுப்பாடு.!

0 2228

கொரோனா வைரஸ் பீதி உலகை ஆட்டி படைத்து வருகிறது. அங்கே சுற்றி இங்கே சுற்றி இந்தியாவிலும் சற்று வலுவாக தடம் பதித்துள்ளது கொரோனா. இதுவரை நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்டோருக்கும் , தமிழகத்தில் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியால் கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தாக்காமல் தப்பிக்க முகத்தில் மாஸ்க் அணிவதுடன் கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்து கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை அடுத்து கொரோனா பீதியில் உள்ள நாட்டு மக்கள், வைரஸ் தொற்றிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மாஸ்க் வாங்குவதற்கும், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் சானிட்டைசர் (hand sanitizer) வாங்குவதற்கும் கடைகளுக்கு படையெடுக்கின்றனர்.

image

சோப்புகள், ஹேண்ட் வாஷ்களோடு ஒப்பிடும் போது Hand Sanitizer-கள் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளிடமிருந்து நம்மை அதிகம் பாதுகாப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உலகம் முழுவதும் பல இடங்களில் Hand Sanitizer-களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தற்போது நம் நாட்டிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படும் சானிடைசரின் தேவை அதிகரித்து வருகிறது. கொரோனா விழிப்புணர்வு அதிகரித்து மக்களின் கவனம் கிருமி நாசினிகள் பக்கம் திரும்பியுள்ளதால் ஃபேஸ் மாஸ்க்கிற்கு அடுத்தபடியாக Sanitizer-களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல நிறுவனங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு பயன்படுத்தப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலக வாயில்களிலேயே Hand Sanitizer பொருத்தப்பட்டுள்ளது. ஊழியர்கள் அதனை கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே பயோ மெட்ரிக் மெஷினை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்னும் சிலரோ எங்கு சென்றாலும் கூடவே Hand Sanitizer பாட்டிலை பேண்ட் பாக்கெட்டுகளில் வைத்து கையோடு எடுத்து சென்று பயன்படுத்தி வருகின்றனர். தேவை அதிகரித்துள்ளதால் கிருமி நாசினியின் விலையும் உயர்ந்துள்ளது. கடைகளில் மட்டுமல்ல ஆன்லைனில் விற்கப்பட்டு வந்த சில முன்னணி நிறுவனங்களின் Sanitizer-களும் பல மடங்கு விலை உயர்த்தி விற்கப்படுவதாக புகார் எழுந்தது.

image

லட்சக்கணக்கான மக்கள் பஸ்கள், ரயில்கள் என பொது போக்குவரத்தை பயன்படுத்தி அன்றாட பணிகளுக்கும் இன்னபிற வேலைகளுக்கும் சென்று வருவதால் எளிதில் கொரோனா தாக்க கூடிய அபாயம் இருப்பதாக உணர்கின்றனர். எனவே கடைகளுக்கு படையெடுக்கும் மக்கள் ஃபேஸ் மாஸ்க் மற்றும் கிருமி நாசினியான Sanitizer-களை வாங்கி இருப்பு வைத்து வருகின்றனர்.

பொது மக்கள் 3 முதல் 5 Sanitizer Bottle-களையும், அலுவலகங்களாக இருக்கும்பட்சத்தில் 50 முதல் 100 Sanitizer Bottle-களையும் ஒரே சமயத்தில் வாங்கி செல்வதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு Sanitizer Bottle வாங்கி சென்றாலே போதுமானது. ஆனால் தேவைப்படும்போது கடைகளில் Stock இருக்காதோ என்றெண்ணி அதிக Sanitizer Bottle-களை வாங்கி செல்கின்றனர் என குறிப்பிட்டுள்ளனர் கடைக்காரர்கள்.

இதுகுறித்து கூறியுள்ள மாநில சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேபோல விமான நிலையங்களில் கொரோனா கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் Sanitizer மற்றும் Face Mask-குகளை பயன்படுத்துவது அவசியம். மக்கள் இவற்றை பரவலாக பயன்படுத்தும் அளவிற்கு நிலைமை கை மீறி செல்லவில்லை. எனவே இவற்றை அதிக அளவில் வாங்குவதை மக்கள் தவிர்த்தாலே தட்டுப்பாடும் குறையும், விலையும் குறையும் என கூறி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments