காட்டூர் இந்து முன்னணி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு..விசாரணை தீவிரம்...

0 1012

கோவை இந்து முன்னணி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காட்டூர் பகுதியிலுள்ள அமைந்துள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் அதிகாலை வேளையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 4ஆம் தேதி இந்து முன்னணி நிர்வாகி குறிச்சி ஆனந்த் மீதான தாக்குதல், அதே நாளில் கணபதி பகுதியிலுள்ள பள்ளிவாசல் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, சனிக்கிழமை இரு தரப்பின் சார்பாகவும் நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டம், அதனைத் தொடர்ந்து இன்று இந்து முன்னணி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு என மாநகரில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments