Yes Bank வாடிக்கையாளர்கள் கிரடிட் கார்ட் கட்டணம் செலுத்துவது எப்படி?

0 1305

எஸ் வங்கியின் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள அதன் வாடிக்கையாளர்கள், கிரடிட் கார்டுகள் (Credit Card) மற்றும் கடன்களுக்கான மாதாந்திர தவணைகளை (EMI) அவர்களது இதர வங்கி கணக்குகளில் இருந்து IMPS அல்லது NEFT வழியாக செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எஸ் வங்கியின் பெயரில் ரிசர்வ் வங்கி டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

அதேசமயம் எஸ் வங்கிக் கணக்கில் இருந்து இந்த முறைகள் வாயிலாக வெளிக்கணக்குகளுக்கு பணம் அனுப்புவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

வாராக்கடன்கள் மற்றும் நிதி முறைகேட்டை தொடர்ந்து நெருக்கடியில் சிக்கியுள்ள எஸ் வங்கியை ரிசர்வ் வங்கி, தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான மாதாந்திர உச்சவரம்பை 50 ஆயிரம் ரூபாயாகயும் அது நிர்ணயித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments