டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கு - சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீது பதிலளிக்க உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு மீது தமிழக அரசு, சிபிசிஐடி, சிபிஐ, டி.என்.பி.எஸ்.சி. ஆகியவை 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், முக்கியக் குற்றவாளிகள் பலரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் கடந்த 10 ஆண்டுகளாக முறைகேடுகள் நடந்து வருவதாகவும், சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனு மீது, தமிழக அரசு, சிபிசிஐடி, சிபிஐ, டி.என்.பி.எஸ்.சி. 2 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Comments