சர்க்கரை நோயாளிகளுக்கு பயனுள்ள புதிய ரக அரசி

0 2143

அரிசி சாதம் அதிகம் எடுத்துக் கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அவதிப்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி ஒன்று உள்ளது.

கம்பு, கேழ்வரகு போன்ற சிறுவகை தானியங்களை விடவும் மாவுச் சத்து குறைவான தெலங்கானா சோனா என்ற அரிசி ரகத்தை ஐதராபாத் தெலங்கானா வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜெய்சங்கர் என்பவர் உருவாக்கி இருக்கிறார்.

இந்த அரிசியில் 51 சதவிகிதம் மட்டுமே மாவுச் சத்து இருப்பதுடன், இருதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும் என்று புகழ் பெற்ற American Journal of Food Nutrition இதழ் தெரிவித்துள்ளது.

Type Two டயாபெட்டிஸ் எனப்படும் பொதுவான சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்கு இந்த அரிசி பெரிதும் உதவிகரமாக இருக்கும் என கூறப்படுகிறது. 120 ல் இருந்து 130 நாட்களுக்குள் விளைச்சல் தரும் ரகமாக இருப்பதால், விவசாயிகளுக்கும் இந்த அரிசி ரகம் பயனுள்ளதாக இருக்கும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments