துருக்கி அதிபரை அவமானப்படுத்திய ரஷ்ய அதிபர்..?
சிரியா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த ரஷ்யாவுக்கு சென்ற துருக்கி அதிபரை அவமானம் படுத்தும் நோக்கத்துடன் அந்நாட்டு அதிபர் புதின் காக்க வைத்ததாக புகார் எழுந்துள்ளது.
குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள தங்கள் நாட்டின் இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியா அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக நடக்கும் சண்டையில் கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி அரசும், சிரியாவுக்கு ரஷ்யாவும் ஆதரவு அளித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இருதரப்பிலும் உயிர்சேதம் அதிகரித்துள்ளது.
இதனால், போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் மற்றும் அதிகாரிகளை, ரஷ்ய அதிகாரிகள் தடுத்து நிறுத்தி தனி அறையில் காக்க வைத்தனர்.
Comments