infosys நிறுவனத்திற்கு 15 நாட்கள் கெடு !

0 8473

இன்போசிஸ் நிறுவனம் ஜி.எஸ்.டி தாக்கல் குறித்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான திட்டத்தை தெரிவிக்க மத்திய நிதியமைச்சகம் கெடு விதித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிகளை செலுத்துவதற்கான ஜி.எஸ்.டி நெட்வோர்க் இணையதளத்தை இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம் வடிவமைத்தது. சமீபகாலங்களாக ஜி.எஸ்.டி இணையதளம்  பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இணையதளத்தில் உள்ள குறைகளை தீர்ப்பதற்கான திட்டத்தை தெரிவிக்க இன்போசிஸ் நிறுவனத்தை மத்திய நிதியமைச்சகம் கேட்டுகொண்டுள்ளது. அதன்படி குறைகளை தீர்ப்பதற்கான திட்டத்தை வரும் 15 நாட்களுக்கு தெரிவிக்க கெடு விதித்துள்ளது.

ஜி.எஸ்.டி இணையத்தில் உள்ள பிரச்சனையால், வரி தாக்கல் செய்பவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக இன்னல்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டில், ஏற்பட்ட பிரச்சனை முடிவு பெறாமல் உள்ளதாகவும், இதனால் இன்போசிஸ் நிறுவனம் குறைகளை தீர்ப்பதற்கான திட்டத்தை வரும் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என கெடு வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments