திருப்பதியில் குடிக்கும் குடிநீரில் ஏமாற்று வேலை..?
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கு பதில் சாதாரண குடிநீரை கொடுத்து ஊழியர்கள் ஏமாற்றுவதாக புகார் எழுந்துள்ளது.
ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்க அவர்கள் தங்கி இருக்கும் அறைகளில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் தேவஸ்தானம் சார்பில் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒப்பந்த ஊழியர்கள் சாலையோரம் உள்ள ஒரு குழாயில் நீரை பிடிப்பதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பிரச்னையில் தேவஸ்தானம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments