BS 4 வாகனங்களை காலக்கெடுவிற்குள் விற்க முடியுமா? F.A.D.A அச்சம்
பாரத் ஸ்டேஜ் 4 வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள்ளாக அவ்வாகனங்களை விற்க முடியுமா? என்ற கேள்வி விற்பனையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மத்திய அரசு விதித்துள்ள புதிய விதிமுறையின்படி, வரும் மார்ச் 31ம் தேதியுடன் பிஎஸ் 4 வாகனங்களை இந்தியாவில் விற்க தடை செய்துள்ளது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ் 6 வாகனங்கள் மட்டும் விற்பனை செய்யவேண்டும் என புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், பிஎஸ் 4 வாகனங்களை இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விற்பனை செய்வது எப்படி என்ற அச்சத்தில் உள்ளதாக வாகன முகவர்கள் கூட்டமைப்பான எப்.ஏ.டி.ஏ தெரிவித்துள்ளது.
மேலும், வங்கிகளும் கடனுதவி வழங்குவதை நிறுத்தும் என்பதாலும், கொரானா வைரஸ் தாக்கமும் இருந்து வருவதால், பெரும் நஷ்டம் ஏற்படும் என வாகன முகவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால், விற்க முடியாத வாகனங்களை திரும்ப பெற்று வேறு நாடுகளில் விற்க முயற்சி செய்யவேண்டும் என முகவர்கள் கூட்டமைப்பு கேட்டுகொண்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றத்தை நாடுவதை ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
Comments