கொரானா வைரஸ் எதிரொலி: பெங்களூரில் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் இன்று முதல் அடுத்த உத்தரவு வரும் வரை விடுமுறை
கொரானா வைரஸ் எதிரொலியாக பெங்களூரு நகரில் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் இன்று முதல் அடுத்த உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் நபர் ஒருவருக்கு கொரானா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது .
இதுதொடர்பாக பேசிய மாநில மருத்துவ கல்வி அமைச்சர் டாக்டர் கே. சுதாகர், தகவல் தொழில் நுட்ப ஊழியராக பணியாற்றி வரும் அவர் அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக இந்தியா வந்துள்ளார் என்றார். அவருடன் 2ஆயிரத்து 666 பேர் தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் அவர்களை கண்டறியும் பணி நடந்து வருகிறது என்றார்.
Comments