"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
புதிய கைதிகள், பரோல் முடிந்து வரும் கைதிகளுக்கு தீவிர பரிசோதனை
கேரளாவில் பரோல் முடிந்து சிறைக்கு திரும்பும் கைதிகள் 6 நாட்கள் தனி அறையில் வைத்து கண்காணித்த பின்னரே சிறைக்குள் அனுப்படுவார்கள் என அம்மாநில சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அம்மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. காய்ச்சல், சலி போன்ற பிரச்சனை எந்த கைதிகளுக்காவது ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக இந்த அறைக்கு மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப்போன்று புதிய கைதிகள், பரோல் முடிந்து வரும் கைதிகள் 6 நாட்கள் தனி அறையில் வைத்து கண்காணித்த பின்னரே சிறைக்குள் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments