YES BANK- கட்டுப்பாடுகள் சனிக்கிழமைக்குள் முடிவுக்கு வர வாய்ப்பு - பிரசாந்த்குமார்
யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் வரும் சனிக்கிழமைக்குள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக அதன் நிர்வாக அதிகாரி பிரசாந்த்குமார் தெரிவித்துள்ளார்.
வாராக்கடன்கள், நிர்வாகச் சீர்கேடுகளால் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி இயக்குநரவை முடக்கப்பட்டு ஏப்ரல் 3-ஆம் தேதி வரை புதிய நிர்வாக அதிகாரியாக எஸ்.பி.ஐ. வங்கியைச் சேர்ந்த பிரசாந்த்குமாரை ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.
இந்நிலையில் நிதிச்சிக்கல்களுக்கு தீர்வு காணவும் கட்டுப்பாடுகளை சனிக்கிழமைக்குள் நீக்கும் வகையிலும் செயல்பாடுகளை விரைவுபடுத்தி வருவதாக நிர்வாக அதிகாரி பிரசாந்த்குமார் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீடுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் வரும் வெள்ளிக்கிழமை வங்கி நடவடிக்கைகள் இயல்பு நிலைக்கு வரும் என்றும் அவர் கூறினார்.
Comments