YES BANK கட்டுப்பாடுகள் ஒருவாரத்துக்குள் முடிவுக்கு வர வாய்ப்பு
யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் ஒருவாரத்துக்குள் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக ஸ்டேட் வங்கித் வங்கித் தலைவர் ரஜ்னிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
வாராக்கடன்கள், நிர்வாகச் சீர்கேடுகளால் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி,ஸ்டேட் வங்கி அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜ்னிஷ்குமார், வங்கியின் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிரமமும் நிச்சயமற்ற தன்மையும் குறுகிய காலத்துக்கானதாக இருக்கக் கூடும் என்றார்.
யெஸ் வங்கியில் எஸ்.பி.ஐ. தலையீடு ஏற்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் முதலீடு குறித்து கவலை கொள்ள அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
Comments