மத்தியப் பிரதேசத்தில் 20 அமைச்சர்கள் ராஜினாமா

0 8466

மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 17 பேர் மாயமான நிலையில், அமைச்சரவையை மாற்றியமைக்க வசதியாக 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். 

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் 3 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தலில் காங்கிரஸ், பாஜக தலா ஒரு இடத்தில் வெற்றி பெறும் நிலையில் உள்ளன. அதே சமயம் 3 ஆவது எம்.பி.யை தேர்ந்தெடுப்பதில் இழுபறி இருந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் மாயமாகினர். அவர்கள் பெங்களூருவில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து, நேற்று இரவு அமைச்சர்களுடன் கமல்நாத் ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சரவையை மாற்றியமைக்க வசதியாக 20 அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

மத்தியப் பிரதேச மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்கூட்டம் இன்று நடக்கிறது. இதில் தற்போதைய நிலைமை குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் முகாமிட்டிருப்பதாகவும், அவர் பாஜகவில் இணையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments