ஆப்கன் அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு
ஆப்கன் தலைநகர் காபூலில் அதிபர் அஷ்ரப் கனி பதவியேற்கும் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.
இதனால் அங்கு திரண்டிருந்த மக்கள் பீதி அடைந்து அங்கும் இங்கும் ஓடினர்.சில பெண்கள் அதிபர் பேசிக் கொண்டிருந்த மேடையை நோக்கி ஓடி வந்தனர். எனினும் பதற்றப்படாமல் அதிபர் அஷ்ரப் கனி தொடர்ந்து பதவி ஏற்றதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
அஷ்ரப் கனி திங்களன்று ஆப்கானிஸ்தானின் அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றார். பதவி ஏற்பு விழாவின் போது நடந்த குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை.
எனினும், அமெரிக்கா உடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட தாலிபன்கள், ஆப்கன் சிறையில் உள்ள தங்களது உறுப்பினர்களை விடுதலை செய்யாததை கண்டித்து, மீண்டும் வன்முறையில் இறங்கப்போவதாக சில தினங்களுக்கு முன்னர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Comments