இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு பாதியாக குறைய வாய்ப்பு
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இதே விலை நீடித்தால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவு பாதியாகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் சராசரியாக 66 டாலராகும். சவூதி அரேபியாவின் விலைக்குறைப்பால் ஒரு பீப்பாய் 31 டாலர் என்கிற அளவுக்கு தற்போது குறைந்துள்ளது.
இதே விலை வரும் நிதியாண்டு முழுவதும் நீடித்தால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும் செலவு நடப்பு நிதியாண்டை விடப் அடுத்த ஆண்டு பாதியாகக் குறையும் எனப் பெட்ரோலிய அமைச்சகத்தின் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் பத்தாயிரத்து 500 கோடி டாலராக உள்ள பெட்ரோலிய இறக்குமதிச் செலவு, வரும் நிதியாண்டில் ஆறாயிரத்து நானூறு கோடி டாலராகக் குறையும்.
Comments