படப்பிடிப்புத் தளங்களில் விபத்துகளைத் தடுக்க என்ன நடவடிக்கை?
படப்பிப்பு தளத்தில் விபத்துக்கள் நடப்பதை தடுக்கவும், பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யவும் திரைத்துறை சார்பில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 15 பேர் கொண்ட குழுவில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 5 பேர், நடிகர் சங்கம் சார்பில் 5 பேர், தென்னிந்திய தொழிலாளர் சம்மேளனம் சார்பில் 5 பேர் என உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இனி இந்த குழுவினரின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே திரைப்படங்கள், குறும்படங்களின் படபிடிப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
Comments