காலர் டியூன்களில் தமிழ் குரல் ஒலிக்க ராமதாஸ் வேண்டுகோள்
கொரானா வைரஸ் குறித்து செல்போன் காலர் டியூன்களில் ஒலிக்கும் விழிப்புணர்வு செய்தியை தமிழிலும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு , மத்திய அரசுக்கு, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது "டுவிட்டர்" செய்தியில், செல்போனில் ஆங்கிலத்தில் மட்டுமே விழிப்புணர்வு செய்தி இடம் பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த விழிப்புணர்வு செய்தி, மிகவும் பயனுள்ளது என பாராட்டு தெரிவித்துள்ள ராமதாஸ், நாட்டின் கடைகோடியில் வசிக்கும் மக்கள் கூட, செல்போன்களை பயன்படுத்துவதால் ஆங்கிலத்தில் வழங்கும் விழிப்புணர்வு செய்தி முழுமையாக பயனளிக்காது என குறிப்பிட்டு உள்ளார்.
எனவே, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் கொரானா விழிப்புணர்வு செய்தியை செல்போன் காலர் டியூன்களில் ஒலிக்க செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தவிர்ப்பு குறித்த செல்பேசி காலர் ட்யூன் வடிவிலான விழிப்புணர்வு செய்தி மிகவும் பயனுள்ளது. ஆனால், நாட்டின் கடைக்கோடி குடிமகன் கூட செல்பேசியை பயன்படுத்தும் நிலையில், ஆங்கிலத்தில் மட்டும் செய்தியை வழங்குவது முழுமையாக பயனளிக்காது. மாநில மொழிகளிலும் வழங்க வேண்டும்!

— Dr S RAMADOSS (@drramadoss) March 9, 2020
Comments