Rolls-Royce ஊழியர்களுக்கு சென்னை IIT-ல் பயிற்சி
பொறியியல் தொழில்நுட்பம், அது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்பில் சென்னை தொழில்நுட்பக் கழகமும், உலகப்புகழ் பெற்ற கார் தயாரிப்பாளர்களான (IIT) ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் இணைந்து செயலாற்றுவதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தானது.
சென்னை தொழில்நுட்பக் கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரோல்ஸ் ராய்ஸ் இந்தியா பொறியியல் பிரிவு தலைவர் ஜெயராம் பாலசுப்பிரமணியம், சென்னை IIT இணை டீன் காமகோட்டி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் படி, பெங்களூருவில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு சென்னை IIT யில் முதுகலை பொறியியல் ஆய்வு மற்றும் டாக்டரேட் பட்டங்களைப் பெறுவதற்கான பயிற்சித் திட்டம் நடத்தப்படும்.
சொகுசு கார் உற்பத்தியோடு, 150 க்கும் அதிகமான நாடுகளில் விமான சேவை, ராணுவத் தளவாடம் உள்ளிட்டவற்றில் முத்திரை பதித்த நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments