ராணா கபூர் குடும்பத்தார் மீதும் பாய்ந்த வழக்கு...
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ் வங்கி முன்னாள் தலைவர் ராணா கபூரின் மனைவி மற்றும் மகள்களின் மீது அதே பிரிவின் கீழ் சி.பி.ஐ.வழக்கு பதிவு செய்துள்ளது. திவான் ஹவுசிங் நிறுவனத்திற்கு எஸ் வங்கி நாலாயிரத்து 500 கோடி ரூபாய் கடன் அளித்தது.
அது வாராக்கடனாக மாறிய நிலையில், இந்த கடனுக்காக ராணா கபூரின் மகள்கள் நடத்தும் போலி நிறுவனத்திற்கு திவான் ஹவுசிங் 600 கோடி ரூபாய் அளித்ததாக புகார் எழுந்தது. இதை அடுத்து அமலாக்கப்பிரிவால் கைது செய்யப்பட்ட ராணா கபூர் மீது சி.பி.ஐ.யும் நேற்று வழக்கு பதிவு செய்தது.
இதனிடையே லண்டனுக்கு தப்ப முயன்ற அவரது மகள் ரோஷ்னி கபூர் நேற்று மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த நிலையில் ரோஷ்னி கபூர் உள்ளிட்ட ராணா கபூரின் குடும்ப உறுப்பினர்கள் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Comments