பத்ம விருதுகள் வழங்கும் விழாவை காண்பதற்கான வினாடி வினா போட்டி - பிரதமர் மோடி அழைப்பு

0 1083

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் பத்ம விருதுகள் வழங்கும் விழாவை காண்பதற்கான வினாடி வினா போட்டியில் பங்கேற்க பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வரும் 20 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கவுள்ளார். இது தொடர்பான தனது ட்விட்டர் பதிவில் பல அடித்தட்டு சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சாதனையாளர்களின் வாழ்க்கை பயணம் பலருக்கு உத்வேகம் தருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தகைய பெருமை வாய்ந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவை காண்பதற்கான அரிய வாய்ப்பை வினாடி வினா போட்டி மூலம் அரசு வழங்குவதாக அவர் கூறியுள்ளார். அதற்கான இணையதள முகவரியையும் தனது ட்வீட்டில் பிரதமர் மோடி இணைந்துள்ளார்.

Every year, several grassroots level achievers are honoured with Padma Awards. Their life journeys inspire many.

Here is a unique quiz competition, the Padma Quiz which gives you an opportunity to witness the Padma Awards ceremony at Rashtrapati Bhavan.
https:/t.co/J2XksCDyF0 pic.twitter.com/5XCa7Hkq43

— PMO India (@PMOIndia) March 9, 2020 ">

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments