கொரானா கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு திமுக சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ்

0 865

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க சபாநாயகரிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகளும், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் சபாநாயகர் தனபாலை அவரது அறைக்குச் சென்று சந்தித்தனர். அப்போது, கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என சபாநாயகரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். முன்னதாக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எதிர்க்கட்சி தலைவரிடம் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments