தமிழக-கேரள எல்லைகளில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
பறவைக்காய்ச்சல் பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக-கேரள எல்லைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 2 பண்ணைகளில் அடுத்தடுத்து கோழிகள் உயிரிழந்ததையடுத்து நடந்த பரிசோதனையில் பறவைக்காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்காசி புளியரை, கன்னியாகுமரி களியக்காவிளை, உள்ளிட்ட தமிழக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் குளோரின் டை ஆக்சைடு கிருமி நாசினி தெளித்த பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. கோழி மற்றும் மருத்துவக் கழிவுகள் ஏற்றி வரும் வாகனங்கள் திருப்பு அனுப்பப்படுகின்றன.
Comments