60 வயதில் தோழியை கரம் பிடித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்

0 2769

60 வயதான காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், தனது நெடுநாள் தோழியான ரவீனா குரானாவை திருமணம் செய்துள்ளார்.

டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இவர்களது திருமணத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். மத்திய முன்னாள் அமைச்சரான முகுல் வாஸ்னிக், ராகுல் காந்திக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக தேர்வாக வாய்ப்புள்ள நபர்களுள் ஒருவராக கருதப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments