மாநில திட்டக்குழுவின் துணை தலைவராக பொன்னையன் நியமனம்
மாநில திட்டக்குழுவின் துணை தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் தலைமையில் இயங்கி வரும் திட்டக்குழு அரசின் ஐந்தாண்டு திட்டங்களை தயாரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேபோன்று, ஒவ்வொரு நிதியாண்டிலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக ஆண்டு திட்டங்கள் குறித்து திட்டக்குழு முடிவெடுக்கும்.
அத்தகைய மாநில திட்டக்குழுவின் துணை தலைவராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments