"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
வாக்கு இயந்திரங்கள் இருந்த கிடங்கில் பயங்கர தீவிபத்து - தேர்தல் நடத்துவதில் சிக்கல்
வெனிசுலாவில் வாக்கு இயந்திரங்கள் இருந்த கிடங்கில் தீப்பற்றியதால் அந்நாட்டின் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசியல் நெருக்கடி காரணமாக எதிர்க்கட்சிகள் நிர்வகித்து வரும் நாடாளுமன்றத்துக்கு இந்த ஆண்டு தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வாக்குப்பதிவு தேதி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், தலைநகர் கராகஸில்(Caracas) வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்த கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு இயந்திரங்களும், 600 கணினிகளும் எரிந்து நாசமானதாக தேர்தல் ஆணையர் திபிசே லூசெனா(Tibisay Lucena) தெரிவித்துள்ளார். மீதமுள்ள இயந்திரங்களை கொண்டு தேர்தல் நடத்த முடியுமா என ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments