மெக்சிகோவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மெக்சிகோ நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முக்கிய நினைவுச் சின்னங்களை பெண்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மெக்சிகோ நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி பெண் சமூக செயற்பாட்டாளர்கள் மெக்சிகோ நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல் துறையின் கட்டுப்பாட்டையும் மீறி, அங்கிருந்த நினைவுச் சின்னங்களை சுற்றி இருந்த தடுப்புகளை பிடுங்கி எரிந்து விட்டு, நினைவுச் சின்னங்கள் மீது ஏறி வண்ணங்கள் பூசியும், அவற்றை சுத்தியலால் அடித்து உடைத்தும் சேதப்படுத்தினர்.
Comments