இந்தியாவில் 40 சதவிகித அரசு பள்ளிகளில் மின்சாரம் மற்றும் விளையாட்டுத் திடல் வசதி இல்லை
இந்தியாவில் சுமார் 40 சதவிகித அரசு பள்ளிகளில் மின்சாரம் மற்றும் விளையாட்டுத் திடல் வசதி இல்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற குழு, நாட்டில் உள்ள அரசு பள்ளிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, 2017-2018ஆம் ஆண்டு கணக்குப்படி, நாட்டில் 56 சதவிகித அரசு பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தில், சுமார் 20 சதவிகித அரசு பள்ளிகளில் மட்டுமே மின்சார வசதி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 57 சதவிகித அரசு பள்ளிகளில் மட்டுமே விளையாட்டு திடல் உள்ளதாகவும் ஒடிசா மற்றும் ஜம்மு காஷ்மீரில் சுமார் 30 சதவிகித அரசு பள்ளிகளில் மட்டுமே விளையாட்டு வசதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொருத்தவரை சுமார் 72 சதவிகித பள்ளிகளில் விளையாட்டு திடல் வசதி உள்ளது. அதேபோல, நாட்டில் சுமார் 40 சதவிகித பள்ளிகளுக்கு சுற்றுச் சுவரே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments