பேராசிரியர் க.அன்பழகனுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

0 1161

சட்டப்பேரவையின் மாண்பையும் சிறப்பையும் காப்பதில் உறுதிக்கொண்டவர் பேராசிரியர் அன்பழகன் என சபாநாயகர் தனபால் புகழாரம் சூட்டினார்.

திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் க.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.பி.சாமி, எஸ்.காத்தவராயன் ஆகியோர் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அமைச்சராக, பேரவை முன்னவராக இருந்த காலகட்டங்களில், பேரவை விவாதங்கள் சூடுபறக்கும் போது தன்னுடைய ஆணித்தரமான கருத்துகளை மற்றவர்கள் ஏற்கும் வண்ணம் தெரிவித்து பேரவையை அமைதியாக நடத்த உதவியவர் பேராசிரியர் என சபாநாயகர் தனபால் குறிப்பிட்டார்.

மறைந்த உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் வரும் 11ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என அறிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments